Wednesday, May 15, 2013

அர்த்தமற்ற கோபங்கள்


அர்த்தமற்ற கோபங்கள் என்னுள் அறியாத உன் சேய் நான் அறிவில்லாமல் கோபம் கொள்கிறேன் சில நேரங்களில் என் கோபம் உன்னோடு என் எதிர்பார்ப்பு உன் பாசம் ஒன்றே என் தாயானவனே v.m.j.gowsi

தொழுவதும் சுகமே


நிஜத்துக்கு ஒரு சுகம் நிழலுக்கு ஒரு சுகம் நினைவுக்கு ஒரு சுகம் உனக்காக இறைவனிடம் தொழுவதும் சுகமே v.m.j.gowsi

காதல்


நம் கண்கள் மோதி வந்ததில்லை நம் காதல் நம் இதயம் மோதி உணர்வுகளால் உருவானதே நம் காதல் v.m.j.gowsi

சரணடைய


உன் பாதம் தொட்டு உன் தோள் சாய்ந்து உன் கண்ணில் என் முகம் பார்த்து உன் உச்சியில் என் உதடு பதித்து என் காதல் உன்னிடம் சரணடைய காத்திருக்கிறது என் தாயானவனே v.m.j.gowsi

நானும்


வெயிலின் வலி தாங்காமல் உருகும் பனி காட்டி நானே உன் வார்த்தையின் வலி தாங்காமல் நானும் .......... v.m.j.gowsi

மனைவியாக


நான் தீண்ட உன்னை தென்றல் தீண்டினாலும் துடித்து போகிறேன் காத்திரு ஜென்மம் எடுத்து வருவேன் கணவா உன் மனைவியாக v.m.j.gowsi

தாயானவனே


மடியிலே சுமக்காமல் நெஞ்சிலே சுவாசித்து உன்னை போல் தாய் அன்பை தர யாரால் முடியும் என் தாயானவனே v.m.j.gowsi